காமராஜருக்குப் பொருளாதாரப் பின்புலம் இல்லை! கல்விப் பின்புலம் இல்லை! சமூகப் பின்புலம் இல்லை. காமராஜ் தனது முயற்சியாலே உயர்ந்தார், தனது தியாகத்தாலே உயர்ந்தார், காமராஜ் யாராலும், எதனாலும் உருவாக்கப்படவில்லை, தானாகவேதான் அவர் உருவானார். இவ்வகையில் அவர் ஒரு சுயம்பு! |
||
பெயர் | கு.காமராஜர் | |
தந்தையார் பெயர் | குமாரசாமி நாடார்(தேங்காய் வியாபாரம்) | |
தாயார் பெயர் | சிவகாமி அம்மையார் | |
பிறந்த இடம் | சுலோசன நாடார் தெரு, விருதுபட்டி. (தற்போது விருதுநகர்) | |
படித்த பள்ளி | ஷ்ரிஜத் ஏனாதி நாயனார் வித்யாசாலா(1 ஆண்டு), பிடிஅரிசி பள்ளி(kshatriya vidhyasala) | |
தெரிந்த மொழிகள் | தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் | |
பிடித்த நூல் | கம்பராமாயணம் | |
முதல் போராட்டம் | வைக்கம் போராட்டம் | |
முதல் மேடை | எளிங்க நாயக்கன் பட்டி (அழகாபுரி செல்லும் வழியில் செங்குன்றாபுரம் அருகே.) | |
முதல்முறை சிறைவாசம் | உப்பு சத்தியாகிரகத்தில் | |
குருவாக எண்ணியவர் | சத்தியமூர்த்தி ஐயர் | |
காரிய கமிட்டி உறுப்பினராக | 1931 | |
காங்கிரஸ் செயலாளராக | 1936 | |
காங்கிரஸ் தலைவராக | 1940 | |
ஒருநாள் பதவியான நகரசபை | 1942 | |
உதவியாளர் | வைரவன் | |
தாய்மாமா | கருப்பையா நாடார்(ஜவுளிக்கடை), காசிநாராயணன்(கேரளா-மரக்கடை) | |
நண்பர்கள் | தங்கப்பன்,ரெங்கன்,பெரிய கருப்பன்,பழனிக்குமார் பிள்ளை,கே.எஸ்.முத்துச்சாமி ஆசாரி,முருக தனுஷ்கோடி,அப்துல் ரகுமான்,ஜார்ஜ் ஜோசப்,சுப்புராய பந்தல் வரதராஜுலு நாயுடு | |
பாட்டியின் பெயர் | பார்வதி அம்மாள் | |
காமராஜர் முதல் அமைச்சரான ஆண்டு | 13-4-1954 | |
தனது பதவிக் காலத்திலிருந்து விலகிய ஆண்டு | 2-10-1963 | |
இறந்த நாள் | 2-10-1975 |
வ.எண் | நினைவாக | நினைவலைகள் | விபரம் | தேதி |
1. | அரசு வெளியீடு | அரசிதழ்(கெஜட்) | கருப்பு பார்டர் | 1975 |
அஞ்சல் தலை,அஞ்சல் அட்டை,அஞ்சல் உறை | 25பை | 15.7.1976 | ||
நாணயம் | ரூ.5,ரூ.100 | 2004 | ||
2. | நினைவு இல்லம் | பிறந்து வளர்ந்த வீடு | விருதுநகர் | |
வாழ்ந்த வீடு | சென்னை | 15.7.1978 | ||
3. | நினைவகம் | எரியூட்டப்பட்ட இடம் | சென்னை(கிண்டி) | 1976 |
அஸ்தி | கன்னியாகுமரி | 2.10.2000 | ||
மணிமண்டபம் | விருதுநகர் | 2012 | ||
காட்சியகம் | விருதுநகர் | 2016 | ||
4. | சிலை | காமராஜர் வாழ்ந்த காலத்திலேயே சென்னை மாநகராட்சி நிறுவியது.நேரு திறந்து வைத்தார் | சென்னை மெளண்ட் ரோட்டில் | 09.10.1961 |
சென்னை | ||||
புது டெல்லி | ||||
நாடாளுமன்ற வளாகம் | ||||
5. | புகைப்படம் திறந்து வைத்தல் | குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி திறந்து வைத்தார். | சட்டமன்ற வளாகம் | 18.8.1977 |
6. | பெயர் மாற்றம் | சென்னை உள்நாட்டு விமான நிலையம் | காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் | |
மதுரை பல்கலைக் கழகம் | மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் | 1978 | ||
கடற்கரைச் சாலை | காமராஜ் சாலை | |||
7. | பெயரிடல் (அ) பெயர்சூட்டுதல் | விருதுநகரைத் தலைமையகமாகக் கொண்டது | காமராஜ் மாவட்டம்(தற்போது விருதுநகர் மாவட்டம்) | 15.7.1984 |
தமிழக அரசு வாங்கிய 3வது கப்பலுக்கு | தமிழ்காமராஜ் | |||
8. | கல்விச் சாலை | இலவசப் பள்ளி | பர்மா தலைநகர் ரங்கூனில் |