வருடம் | நிகழ்வுகள் |
15.7.1903 | புதன் கிழமை காமாட்சி என்ற காமராஜ் பிறந்தார். |
1907 | தங்கை நாகம்மாள் பிறந்தார் |
1908 | ஏட்டுப்(திண்ணைப்) பள்ளியில் சேர்ந்தார் |
பின் ஏனாதி நாயனார் வித்யாசாலாவில் படித்தார். | |
1909 | சத்திரிய வித்யாசாலாவில்(பிடியரிசிப் பள்ளியில்) சேர்க்கப்பட்டார். |
1910 | தந்தை குமாரசாமி நாடார் மறைவு |
1914 | ஞானம்பிள்ளை பெட்டிக்கடை அறிமுகம் ஏற்பட்டது. |
1914 டிசம்பர் | ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது பள்ளி செல்வது நிறுத்தப்பட்டது. |
1915 | காங்கிரஸ் கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். |
13.04.1919 | ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பாதிப்படைந்தார். |
1919 | சுதந்திரப் போராட்டத்தில் முழுவதுமாக ஈடுப்பட்டார். |
1920 | ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். |
கதராடை அணிய ஆரம்பித்தார். | |
1921 | பிரிட்டிஷ் இளவரசர் வருகைப் பகிஷ்கரிப்பில் கலந்து கொள்ளச் சென்னை சென்றார். |
விருதுபட்டிக் காங்கிரஸ் கட்சி உறுப்பினரானார். | |
எளிங்க நாயக்கன் பட்டியில் முதன் முதலில் மேடையில் பேசினார். | |
22.9.1921 | காந்திஜி,வேட்டியும் துண்டும்(சன்னியாசி உடை) முதன் முதலாக அணிந்து வந்து மதுரை மேடையில் தோன்றினார்.அன்று தான் முதன் முதலாக காமராஜ் காந்தியைப் பார்த்தார். |
1922 | சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரானார். |
சாத்தூர் தாலுகாக் காங்கிரஸ் மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராக இருந்தார். | |
1923 | கள்ளுக்கடை மறியலை மதுரையில் நடத்தினார். |
விருதுபட்டியில் வாள் போராட்ட ஊர்வலம் நடத்தினார். | |
நாகபுரி கொடிக் கிளர்ச்சிக்குத் திருச்சியில் இருந்து தொண்டர்களைத் திரட்டினார். | |
1927 | சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டம் நடத்த,காந்திஜியிடம் சென்னை சென்று அனுமதி பெற்றார்.போராட்டம் நடத்தும் முன் சிலை அகற்றப்பட்டது. |
1928 | சைமன் குழுவை எதிர்த்து மதுரையில் போராட்டம் நடத்தினார். |
12.3.1930 | வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையுடன் ஆந்திராவிலுள்ள அலிபுரம் பெல்லாரி(முதல் முறையாக) சிறையில் அடைக்கப்பட்டார். |
1931 | காந்தி-இர்வின் ஒப்பந்தத்தால் விடுதலை ஆனார். |
சென்னை மாகாணக் காங்கிரஸ் காரியக் கமிட்டிச் செயற்குழு உறுப்பினரானார். | |
இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். | |
1931 | ஜாமின் வழக்கில் கைதாகி ஒரு ஆண்டு சிறைத் தண்டனை(2வது முறை) பெற்று,திருச்சிச் சிறையிலும்,வேலூர்ச் சிறையிலும் இருந்தார். |
1932 | சதி வழக்கு போடப்பட்டு(3வது முறையாக) கைதாகி பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். |
1933 | ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையம் மற்றும் விருதுநகர் அஞ்சலக வெடிகுண்டு வழக்கு போடப்பட்டு(4 வது முறை) கைதாகி பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். |
வைஸ்ராய்,சென்னை மாகாண வருகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காமராஜ்(5வது முறை) கைது செய்யப்பட்டார். | |
28.12.1935 | காங்கிரஸ் பொன்விழா விருதுநகரில் கொண்டாடினார். |
1936 | சென்னை மாகாணக் காங்கிரஸ் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும் காமராஜ் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
14.7.1937 | பொதுத் தேர்தலில் சென்னை மாகாண சட்டசபை விருதுநகர் உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் போட்டியின்றி(ஏகமனதாக) தேர்ந்தெடுக்கப்பட்டார். |
1937 | விருதுநகர் நகராட்சி மன்ற தேர்தலில் 7வது வார்டு உறுப்பினராகத் (கவுன்சிலராக) தேர்ந்தெடுக்கப்பட்டார். |
30.10.1939 | இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்து கொண்டது பற்றிய கருத்து வேறுபாட்டில் காந்திஜி(காங்கிரஸ்) விருப்பப்படி காமராஜ் உட்பட அனைத்து காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர்.ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி வந்தது. |
1940 | சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தலில் காமராஜ் தலைவராகவும் சத்தியமூர்த்தி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
பாதுகாப்புச் சட்டத்தில்(6வது முறை) காமராஜ் கைது செய்யப்பட்டார். | |
3.5.1941 | விருதுநகர் நகரசபைத் தலைவராகக் காமராஜ் சிறையில் இருக்கும் போது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
16.3.1942 | விருதுநகர் நகரசபைத் தலைவராகப் பொறுப்பேற்று,அன்றே ராஜினாமாச் செய்தார். |
16.8.1942 | ஆகஸ்ட் புரட்சியின் காரணமாகத் தேடப்பட்டவர்,தானே விருதுநகரில்(7வது முறை) கைதானார்.மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் |
1945 | காங்கிரஸ் கட்சி அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
சென்னை மாகாண காங்கிரஸ் பார்லிமெண்ட்ரி போர்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | |
30.4.1946 | சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் சாத்தூர்த் தொகுதியில் ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
16.5.1946 | சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
13.6.1948 | சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக (தொடர்ந்து 3வது முறையாக) தேர்ந்தெடுக்கப்பட்டார். |
1949 | இலங்கைச் சுற்றுப்பயணம் |
29.08.1949 | சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக 4ம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். |
இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினராக தேர்வு செய்யப்பட்டார். | |
1952 மார்ச் | முதல் பொதுத் தேர்தலில் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராக விருதுநகர் உள்ளடக்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். |
30.4.1952 | சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தலில் காமராஜர் போட்டியிடவில்லை. போட்டியில் (காமராஜர் ஆதரவாளர்) டாக்டர் சுப்புராயன் தலைவரானார். |
26.12.1952 | சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தல் மீண்டும் வந்தது.அதில் போட்டியின்றி காமராஜ்(5வது முறை) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். |
1953 | இரண்டாவது முறையாக இலங்கைச் சுற்றுப்பயணம் |
1954 பிப்ரவரி | மலாய் நாட்டுச் சுற்றுப்பயணம் |
30.3.1954 | முதலமைச்சராக இருந்த இராஜாஜியின் ராஜினாமாவைத் தொடர்ந்து காமராஜ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
1954 ஏப்ரல் | சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கக்கன் காங்கிரஸ் தலைவரானார். |
13.4.1954 சித்திரை 1 | சென்னை மாகாண முதல்வராக பதவியேற்றார். |
1954 | குடுயாத்தம் தொகுதி,சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
1955 டிசம்பர் | இராமநாதபுரம் ஜில்லா கடற்கரைப் புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் சென்று வெள்ள நிவாரணப் பணியை நேரிடையாக கவனித்தார். |
20.1.1956 | 60வது இந்திய காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் சென்னை ஆவடியில் காமராஜ் நடத்தினார். |
1956 மே | சென்னை மாகாண சமதர்ம யாத்திரையில் வினோபாஜியுடன் காமராஜ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். |
1957 | இரண்டாவது பொதுத் தேர்தலில் தமிழக சட்டசபைக்கு சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். |
13.4.1957 சித்திரை1 | மீண்டும் சென்னை மாகாண முதல்வராகப்(தொடரிந்து 2 வதுமுறை)பதவியேற்றார். |
9.10.1961 | சென்னை மாநகராட்சியால் சென்னை மவுண்ட் ரோட்டில் காமராஜ் திரு உருவச் சிலை நிறுவப்பட்டு நேருஜியால் திறந்து வைக்கப்பட்டது. |
1962 | மூன்றாவது பொதுத் தேர்தலில் சட்டசபைக்கு,சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். |
15.3.1962 | மீண்டும்(தொடர்ந்து 3வது முறை) தமிழகத்தின் முதல்வரானார். |
2.10.1963 | தானே உருவாக்கிய ‘காமராஜ் திட்டம்’(K-plan) மூலமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமாச் செய்தார். |
4.11.1963 | இந்தியக் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் இந்திய காங்கிரஸ் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
9.1.1964 | புவனேஸ்வரில் நடந்த இந்திய மகாசபைக் கூட்டத்தில் 62வது தலைவராகத் தமிழில் உரையாற்றினார். |
27.5.1964 | நேருஜி மறைந்தார். |
1964 | சாஸ்திரியைப் போட்டியின்றிப் பிரதமராக்கினார் காமராஜர். |
1965 | பாகிஸ்தான் போருக்கு வந்தது.போர் வீரர்களைப் பாகிஸ்தான் எல்லையில் நேரில் சென்று சந்தித்தார். |
10.12.1965 | சாஸ்திரி மரணமடைந்தார் |
19.1.1996 | இந்திரா காந்தியைப் பிரதமராக்கினார். இரண்டு பிரதமர்களை உருவாக்கியதால் கிங்மேக்கர் (king-maker) எனப் பெயர் பெற்றார். |
1966 பிப்ரவரி | இந்தியக் காங்கிரஸ் தலைவராக மீண்டும்(2வது முறை) தேர்ந்தெடுக்கப்பட்டார். |
22.7.1966 | சோவியத்நாட்டிற்கும் கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கும்,அந்தந்த அரசு அழைப்பின் பேரில் 20 நாள் சுற்றுப்பயணமாக சென்றார். |
1967 | தமிழக சட்டசபை நான்காவது பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் தோல்வியடைந்தார். |
1968 | இந்தியக் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராஜ் போட்டியிடவில்லை. |
8.1.1969 | நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். |
1969 | தாயார் மரணம் |
1969 | காங்கிரஸ் பிளவு ஏற்பட்டு சிண்டிகேட்,இண்டிகேட் என பிரிந்தது. |
1971 | இந்திய பாராளுமன்ற 5வது பொது தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பழைய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மீண்டும் (2வது முறை)வெற்றி பெற்றார். |
1972 | தாமிரப்பத்திர விருதுபெற்றார். |
2.10.1975 | காந்திஜி பிறந்த நாளில் காமராஜ், மதியம் மரணத்தைத் தழுவினார். |
3.10.1975 | காந்திஜி நினைவகம் அருகில் காமராஜ் உடல் எரியூட்டப்பட்டது. |